தமிழகத்தின் முன்னணி புலனாய்வு பத்திரிக்கையான குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் அ.தி.மு.க கூட்டணி 125 இடங்களிலும் தி.மு.க கூட்டணி 109 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஆதான் ஊடகம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் அ.தி.மு.க கூட்டணிக்கு 130 இடங்களும் தி.மு.க கூட்டணிக்கு 100 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ் டி.வி ஒளிபரப்பிய கருத்து கணிப்பில் அ.தி.மு.க கூட்டணி 124 இடங்களிலும், தி.மு.க 94 இடங்களிலும் 16 இடங்களில் இழுபறி நிலையும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெமாக்கரஸி நெட்வர்க் என்ற தனியார் அமைப்பு நடத்திய கள ஆய்வில் 122 இடங்களில் அ.தி.மு.க கூட்டணியும் 111 இடங்களில் தி.மு.க கூட்டணியும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதே போல் மக்கள் மையம் நடத்திய கருத்து கணிப்பிலும்ம் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு 112 முதல் 120 தொகுதிகள் வரையும், திமுக தலைமையிலான கூட்டணிக்கு 80 முதல் 90 தொகுதிகள் வரையிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து கருத்து கணிப்புகளில் அ.தி.மு.க கூட்டணி குறைந்த பட்சம் 122 இடங்களிலும் அதிகபட்சமாக 130 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments are closed.