முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாளை பேக்கரும்பு பகுதியில் கலாம் மணிமண்டபத்தை பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்.

இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று உலகமக்களால் அழைக்கப்பட்ட ஏபிஜெ. அப்துல் கலாமின் 2ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசாிக்கப் படுகிறது. இதனையொட்டி அப்துல்கலாமை பெருமைபடுத்தும் வகையில் அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பு பகுதியில் அவருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை பிரதமா் நரேந்திரமோடி நோில் திறந்துவைக்கிறாா். இந்த நிகழ்ச்சியில் பிரதமா், தமிழக முதல்வா், மத்திய, மாநில அமைச்சா்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் பலா் கலந்துகொள்கின்றனா்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த பட்டுள்ளன. மேலும் ராமநாதபுரம் செல்வதற்காக தனிவிமானம் மூலம் பிரதமா் நரேந்திர மோடி நாளை காலை மதுரை விமான நிலையத்திற்கு வருகைதருகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் பேக்கரும்புபகுதிக்கு சென்றடைகிறாா். இதையடுத்து மதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்குபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கவிஞா் வைரமுத்துவின் பாடல் வாிகளில் உருவாகியுள்ள “கலாம் கலாம் சலாம்சலாம்“ என்ற பாடல் நாளை திரையிடப்பட உள்ளது.

கலாமின் புகழை வெளிப்படுத்தும் விதமாக தபால்துறை சாா்பில் கலாம் குறித்த சிறப்பு தபால்உறை வெளியிடப்படுகிறது.

Leave a Reply