ராஜஸ்தான் காங்., கட்சியின் முதல்வர் அசோக்கெலாட் மீது அதிருப்தியில் இருக்கும் துணை முதல்வர் சச்சின் பைலட் டில்லியில் முகாமிட்டுள்ளார். பா.ஜ.,வுடன் அவர் பேசிவருவதாகவும், இதனால் காங்., ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தானில் அசோக்கெலாட் தலைமையிலான காங்., ஆட்சி நடந்துவருகிறது. கெலாட்டுடன், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு அதிகாரமோதல் நடந்து வருகிறது. மேலும் கெலாட்டின் நடவடிக்கையால், சச்சின்பைலட் அதிருப்பியில் இருப்பதாகவும் தெரியவருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் அரசைகவிழ்க்க பா.ஜ., முயற்சிப்பதாக கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து, 5 எம்எல்ஏ.,க்களுடன் தற்போது சச்சின்பைலட் டில்லி சென்றுள்ளதாகவும், பா.ஜ., தலைவர்களுடன் அவர் பேசிவருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பைலட்டுக்கு 30 எம்எல்ஏ.,க்கள் மற்றும் சிலசுயேட்சை ஆதரவும் இருப்பதாகவும், அவர் எந்தமுடிவை எடுத்தாலும் அவருக்கு ஆதரவாக அவர்கள் உறுதியளித்திருப் பதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து ராஜஸ்தானில் காங்., ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், அங்கு அரசியல் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Comments are closed.