மூத்த பத்திரிகையாளர் கவுரிகொலையை காங்கிரஸ் தலைவர் ராகுல் அரசியலாக்குவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
 

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: கவுரிக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு பாதுகாப்புவழங்க தவறியது ஏன்? கொலைக்கு கண்டனம் தெரிவிக்காமல், பா.ஜ., தலைவர்கள்மீது தேவையற்ற விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டன. அதே நேரத்தில் கேரளா மற்றும் கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கொலை செய்யப்பட்டபோது அவர்கள் வாய் திறக்க மறுத்தது ஏன்? கவுரி, நக்சலைட்களை சரணடையசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக, அவரது சகோதரர் கூறியுள்ளார். இதனை கவுரி கர்நாடகஅரசின் ஒப்புதலோடு தான் செய்தாரா? அவ்வாறு செய்திருந்தால், கர்நாடக அரசு அவருக்கு பாதுகாப்பு வழங்காதது ஏன்?

கவுரி கொலைதொடர்பாக விசாரணை துவங்கும் முன்னரே, எந்தபயிற்சியும் இல்லாமல் பேசும் ராகுல், வெளிப்படையாக ஆர்எஸ்எஸ் வலதுசாரி சித்தாந்தமே கவுரிகொலைக்கு காரணம் எனக்கூறினார். குற்றவாளி எனவும் தீர்ப்புகூறினார். இது போன்ற தவறான கருத்து தெரிவித்துள்ள நிலையில், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு எப்படி நேர்மையான விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply