காங்கிரசை கண்டித்து ஏப்ரல் 12ம் தேதி பாஜக எம்.பி.,க்கள் நாடுமுழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அமைச்சர் ஆனந்த் குமார் கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த பாஜக நாடாளுமன்ற கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் கூறுகையில், பாஜக மக்களை இணைப்பதற்கான வேலையை செய்கிறது, ஆனால் காங்கிரஸ் மக்களை பிரிப்பதற்கான வேலையை செய்கிறது. காங்கிரஸ் பிரிவினைவாத, எதிர்மறையான அரசியல்செய்கின்றன. கடந்த 23 நாட்களாக காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடக்கியது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ்முடக்கியதை கண்டித்து வரும் 12ம் தேதி பாஜக எம்.பி.,க்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவார்கள் என்று கூறியுள்ளார்.

Leave a Reply