182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்ட சபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

 

முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும் இரண்டாம்கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 18-ம்தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

 

இதையடுத்து, குஜராத் ஆகிய மாநிலத்திற்கு விரைவில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாஜக. தீவிரமாக பிரசாரம்செய்து வருகிறது. 

 

பிரதமர் நரேந்திரமோடி நேற்றும் இன்றும் 30-க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவுதிரட்டும் வகையில் தீவிர தேர்தல்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று பத்துக்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி இன்றுவரை சுமார் 30 பொது கூட்டங்களில் பங்கேற்கும் வகையில் அவரது பயணதிட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது.

 

இந்நிலையில், வல்சாட் மாவட்டம், தரம்பூர் பகுதியில் இன்று நடைபெற்ற பிரசாரகூட்டத்தில் பேசிய மோடி, ஊழல்வழக்கில் ஜாமினில் விடுவிக்கப் பட்ட ராகுல் காந்தியை கட்சியின்தலைவர் பதவியில் நியமித்ததன் மூலம் அவுரங்கசிப் காலத்துமன்னர் வாரிசு முறைதான் இன்னும் காங்கிரஸ் கட்சியில் நடை முறையில் இருப்பது நிரூபணம் ஆகியுள்ளது.

 

மற்றகட்சிகளாக இருந்தால், ஊழல்வழக்கில் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நபரை ஒருவட்ட தலைவர் பதவியில் நியமிப்பதானால் கூட இருமுறை யோசிக்கும். ஆனால், காங்கிரஸ் கட்சியில் தான் ஊழல் வழக்கில் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நபரை தேசியதலைவராக நியமிக்கும் வினோதம் நடைபெறுகிறது’ என்று குறிப்பிட்டார்.

Leave a Reply