காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தண்டியாத்திரை நினைவு நாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஏழை எளியமக்களின் வறுமையை ஒழித்திடவும், அவர்களுக்கு வளத்தை கொண்டுவந்து சேர்க்கவும் பாஜக அரசு ஆற்றுகின்ற பணிகள் குறித்துதான் பெருமை கொள்வதாக கூறியுள்ளார்.

தவறான ஆட்சியும், ஊழலும் எப்போதும் இணைந்தே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஊழல் வாதிகளை தண்டிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் தாங்கள் எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். ராணுவம், தொலைதொடர்பு, நீர்ப்பாசனம், விளையாட்டு விவசாயம், உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply