சர்ச்சைக்குரிய ரஃபேல் போர்விமான ஒப்பந்தம் தொடர்பாக பேசப்பட்ட, எழுதப்பட்ட கருத்துகளுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீது ரூ.5000 கோடி மானநஷ்ட ஈடுகேட்டு அனில் அம்பானி தரப்பில் அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில் அனில் அம்பானி , “வழக்கை வாபஸ் பெற முடிவு எடுத்துள்ளதாகவும் ,நீதிமன்றம் கோடைவிடுமுறை முடிந்து மீண்டும் இயங்கத் தொடங்கும்போது அவதூறு வழக்கை வாபஸ் பெறுவதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வழக்கு முடிக்கப் படும் என்று தகவல் வெளியானது. ஆனால் தற்போது இது வதந்தி என தெரிய வந்துள்ளது.

 உண்மையில் காங்கிரஸ் முன்னாள் செய்தித்தொடர்பாளர் மற்றும் பேச்சாளராக இருந்த பிரியங்கா சதுர்வேதி, சமீபத்தில் சிவசேனாவில் சேர்ந்து விட்டார். எனவே அவர் மீது தொடுக்கப்பட்ட 5000 கோடி முறைகேடு வழக்கை அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் வாபஸ்பெற்றது. ஆனால் மேலும் சிலகாங்கிரஸ் முக்கியஸ்தர்கள் மீதும் அம்பானி இதேபோல வழக்கு தொடர்ந்துள்ளார். அவற்றை வாபஸ் பெறவில்லை.

நிலமை இவ்வாறு இருக்க இது குறித்து ஓரு பொய் செய்தி  டுவிட்டரில் சமீபத்தில் வைரலாக வலம்வந்தது.

அதில் ‘காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிரான அத்தனை வழக்குகளையும் அம்பானி வாபஸ் பெற்று விட்டார். இந்த நிலையில் காங்கிரஸ் தோற்கும் என்கிறீர்கள்!’ என பதிவிடப்பட்டு இருந்தது.

இந்தடுவீட்டை பலர் ரீடுவீட் செய்ய, அது வைரலாகியது.

இதனைகண்ட பாஜக உறுப்பினர் ஒருவர் இதுதவறான செய்தி, பிரியங்காவுக்கு எதிரான வழக்கை மட்டுமே அம்பானி திரும்பப் பெற்றார். அவரும் தற்போது காங்கிரஸில்இல்லை. இதர காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதுள்ள வழக்குகள் விசாரணையில்தான் உள்ளன என டுவீட் செய்ய, உண்மை வெளியானது.

Comments are closed.