மத்திய திறன்வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணை மந்திரி அனந்தகுமார் ஹெக்டே,  நேற்று பெலகாவியில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அகிலஇந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பற்றி  பேசி இருக்கிறார். அவர் பேசியதாவது.

நமது நாட்டில் இந்துமதமும் உள்ளது என்பதை ராகுல் காந்தி இப்போது தான் தெரிந்து கொண்டுள்ளார். அதனால் தான் அவர் கோவில்கள், மடங்களுக்குசெல்ல தொடங்கி இருக்கிறார். கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தை எப்படி பெறுவது என்பதுகூட ராகுல் காந்திக்கு தெரியாது. யாரோ சிலர் கூறியதால் அவர் கோவில்களுக்கு செல்கிறார்.

காவி உடையில் ருத்ராட்சை மாலையுடன் கோவிலுக்கும், குல்லாஅணிந்து மசூதிகளுக்கும் ராகுல் காந்தி செல்கிறார். இதன் மூலம் அவர் நாடகம்நடத்தி வருகிறார். இதில் வேறு ஒன்றும் இல்லை. காங்கிரஸ் ஒருநாடக கம்பெனி. காங்கிரஸ் இருக்கும் வரை நாடு வளர்ச்சி அடையாது. காங்கிரசாருக்கு நேர்மைகிடையாது.

பக்தியுடன் கோவில்களுக்கு செல்லதெரியாது. மற்றவர்கள் போகிறார்கள் என்பதற்காக காங்கிரசார் கோவில்களுக்கு செல்கிறார்கள். வரும்நாட்களில் இந்த நாடக கம்பெனி நாட்டில் இருக்கக் கூடாது. நாட்டை காங்கிரஸ் கொள்ளை யடிக்கிறது. மதத்தை அவமரியாதையாக நடத்துகிறது. இவ்வாறு அனந்த குமார் ஹெக்டே பேசினார்.

Leave a Reply