இமாச்சலப் பிரதே சத்தில் ஊழலில் திளைக்கும் காங்கிரஸ் அரசு, தன் தேர்தல்அறிக்கையில் ஊழலை சகிக்கமுடியாது என்று கூறுகிறது, அக்கட்சி சிரிப்புமன்றமாக மாறி வருகிறது என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இங்கு முதல்வர் வீர்பத்திர சிங் தலைமையிலான காங்கிரஸுக்கும், எதிர்க் கட்சியான பாஜகவுக்கும் இடையில் நேரடிப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி இமாச்சலப் பிரதேசத்தில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

பாலம்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசுகையில் ''இமாச்சலப் பிரதேசத்தில் முதல்வர் வீர்பத்திரசிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு பல்வேறு ஊழல்களை செய்துள்ளது. ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஊழலை சகித்துக்கொள்ள முடியாது என தெரிவிக்கப் பட்டுள்ளது. காங்கிரஸ் சிரிப்புமன்றமாக மாறி வருகிறது.

பல மாநிலங்களிலும் காங்கிரஸ்கட்சி இன்று ஆட்சியில் இல்லை. அக்கட்சியை மக்கள் புறக்கணித் துள்ளனர். இதற்கான காரணத்தை உணர்ந்து அக்கட்சி தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்'' என மோடி கூறினார்.

Leave a Reply