காங்கிரஸ் செய்த துரோகம்தான் இந்த கருப்புபண பதுக்கல் என்றும் இதை சரிசெய்யவே பிரதமர் மோடி கருப்புபண ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புதிய 500 ரூபாய் நோட்டுகிடைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் தெரிவித்துள்ளனர்.

திமுக., காங்கிரஸ் கட்சியினர் சொல்வதைப்போல் கருப்புபண ஒழிப்பு குறித்து முன் அறிவிப்பு கொடுத்துவிட்டு நடவடிக்கை எடுத்துஇருக்கலாம் என்று கூறுவது சரியல்ல. அது கருப்புபண முதலாளிகள் ஆதாயம் பெற வழிவகுத்து இருக்கும். காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உணர்ச்சிவசப்பட்டு பேசக்கூடாது. அவர் பிரதமர் மோடியை உணர்ச்சி வசப்பட்டுபேசுவது சரியல்ல.

காங்கிரஸ் செய்த துரோகம்தான் இந்த கருப்புபண பதுக்கல். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தை சரிசெய்யவே பிரதமர் மோடி இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply