கேரளாவில் வரும் 16-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயககூட்டணி, மார்க்சிஸ்ட் இடதுசாரி ஜனநாயக முன்னணி, பாஜக இடையே மும்முனைபோட்டி நிலவுகிறது.

பாஜக தேசியதலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தேர்தல் தொடர்பாக மத்திய ரசாயன, உரத்துறை அமைச்சர் அனந்த குமார் திருவனந்தபுரத்தில் நேற்று கூறியதாவது:

மேற்குவங்கத்தில் காங்கி ரஸும் இடதுசாரிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. கேரளாவில் இருகட்சிகளுக்கும் இடையே மறைமுகமான திரைமறைவு கூட்டணி உள்ளது. வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளின் சாயம் வெளுக்கும்.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளின் கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது. இரு கட்சிகளும் தோல்விபயத்தில் ஏதேதோ உளறி வருகின்றன.

இந்தத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும். கேரளமக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இருகட்சிகளின் ஆட்சியில் அவர்கள் வெறுத்துப் போயுள்ளனர்.

கடந்த மக்களவைத் தேர்த லைப் போன்று கேரள சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக அமோகவெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply