மக்களவையில் நேற்று ‘முத்தலாக்’ தடைமசோதா நிறைவேறியது. காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இந்தநிலையில் முத்தலாக் தடைமசோதாவை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியும், இதரகட்சிகளும் முஸ்லீம் பெண்களிடம் மன்னிப்புகேட்க வேண்டும் என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் சமத்துவமும், முஸ்லீம் பெண்களுக்கு மரியாதையும் ஏற்படுத்தி கொடுக்கப் பட்டுள்ளது. இந்த மசோதாவுக்காக உழைத்த பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply