"காதி என்பது வெறும் ஆடைமட்டுமல்ல, அது ஒருகருத்தியில். காதி என்பது மக்கள் முன்னெடுத்து செல்ல வேண்டிய இயக்கம். காந்திஜெயந்தி தினத்தன்று காதி உடைவாங்கி ஏழைகளுக்கு உதவுங்கள்" என பிரதமர் நரேந்திர மோடி 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

36-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை மன் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்காக உரையாற்றி வருகிறார். இந்தவகையில், 36-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று (செப்.24) பேசிய மோடி, "மன் கி பாத் நிகழ்ச்சி நாட்டின் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்க ஒருதனித்துவமான வாய்ப்பாக மாறிவிட்டது. தேசத்தின் நேர்மறை சக்தியை பிரதிபலிக்கும் நிகழ்ச்சியாக இது இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் மக்கள் ஆக்கபூர்வமான கருத்துகளை பகிர்ந்துகொள்கின்றனர். மக்களின் எண்ண அலைகளை புரிந்துகொள்ள முடிகிறது. இந்நிகழ்ச்சியில் நான் எனது கருத்துகளை கொட்டுவதை விட மக்களின் எண்ணங்களையே பிரதிபலிக்கிறேன். இந்நிகழ்ச்சியில் உரையாற்றுவது நான் என்றாலும். இதில்கூறப்படும் கருத்துகள் என்னுடையது என்று நான் மார்தட்டிய தில்லை. இ-மெயில் மூலமாகவும் தொலைபேசி, மைகவ் ஆப் மூலமாகவும் மக்களிடம் இருந்துபெறப்படும் கருத்துகளையே நான் பிரதிபலிக்கிறேன்"

"ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக அனைவரும் காதி உடைகளை பயன்படுத்த வேண்டும். காதி என்பது வெரும் துணிமட்டுமல்ல, அது ஒருகருத்தியில். காதி என்பது ஒரு வித கொள்கை. அண்மைக் காலமாக மக்கள் மத்தியில் காதிமீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. காதிதுணிகளின் மீது அதிகரித்துவரும் ஆர்வம், காதி துணி உற்பத்தியில் ஈடுபட்டுபவர்கள் மற்றும் அதோடு இணைக்கப் பட்டவர்கள் மத்தியில் ஒருபுதிய சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது.

காதி உடைகளை பிரபலப் படுத்துவதற்காக, அக்டோபர் 2ம் தேதி முதல் அவ்வகை துணிகளுக்கு அரசு சலுகை வழங்க உள்ளது. இது காதிஉடைகள் விற்பனையை அதிகரிக்கும். காதிதுணிகளை உற்பத்தி செய்யும் ஏழைகளின் வீடுகளில் தீபாவளிக்கு சந்தோஷமான விளக்குகள் எறியவழிசெய்யும். எப்போதுமே காதி உடைகளை மட்டுமே அணியுங்கள் என்று நான் சொல்ல வில்லை, நீங்கள் பயன் படுத்தும் துணிகளுள் காதியையும் தேர்ந்தெடுங்கள் என்றேகேட்கிறேன்.

காதிக்கு புதிய தொழில்நுட்பத்தின் மூலம் புத்துயிர் கொண்டு வர வேண்டும். சூரியசக்தியால் இயங்கக்கூடிய தறிகளை அறிமுகப் படுத்தலாம்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் 26 ஆண்டுகளாக மூடிக் கிடந்த சேவாபூரி காதி ஆசிரமம் தற்போது புத்துயிர் பெற்று பலமக்களுக்கு வேலை அளித்து வருகிறது. இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பூட்டிக் கிடந்த பல காதிதுணி தொழிற்சாலைகள் புத்துயிர் பெற்றுள்ளன.

மக்கள் காதியின் மகத்துவத்தை உணரத் தொடங்கி விட்டனர். பெரிய நிறுவனங்களும் கூட தீபாவளி பரிசுகளில் காதிபொருட்களை கொடுக்க தொடங்கியுள்ளன.  நான் குஜராத் முதல்வராக இருந்தபோது காதிபொருட்களை பரிசுப் பொருட்களாக வழங்குவதை பின்பற்றினேன். இபோது, பொது மக்கள் பலரும் காதி பொருட்களை பரிசுப் பொருட்களாக பயன்படுத்து கின்றனர்" என்றார்.

மன் கி பாத் நிகழ்ச்சி 3-வது ஆண்டை நிறைவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply