காமகோடி பீடத்தின் 69-வது சங்கராச் சாரியார் ஜெயேந்திரர் (வயது 82) இன்று காலமானார். அவரது மரணத்திற்கு மத்தியமந்திரி சுஷ்மா சுவராஜ், சுரேஷ்பிரபு, பாஜக. தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் மற்றும் ஆன்மீக தலைவர்கள் மற்றும் அரசியல்கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் மரணம் அதிர்ச்சியளிப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சமூகசிந்தனையுடன் கூடிய ஆன்மிகவாதியை பாரதம் இழந்திருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

ஜெயேந்திரர் மறைவுகுறித்து செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், அவரது ஆன்மாசாந்தியடைய பிரார்த்தனை செய்வதாகவும் மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

சீர்திருத்தவாதியான ஜெயேந்திரர் நாட்டின்வளர்ச்சிக்கு பணியாற்றியவர் என பா.ஜ.க. பொதுச் செயலாளர் ராம் மாதவ் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது

1935ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி திருவாரூர் மாவட்டம் இருள் நீக்கி என்ற கிராமத்தில் பிறந்தார்.

சுப்ரமண்யம் மகாதேவ ஐயர் என்பதை தனது இயற்பெயராக கொண்டவர் காஞ்சி சங்கராச் சாரியர் ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள்.

முன்னாள் பீடாதிபதியான ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி, ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமியை இளைய பீடாதிபதியாக மார்ச் 22, 1954ம் ஆண்டில் அறிமுகம் செய்துவைத்தார்.

தன்னுடைய 19வது வயதில் இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
 

கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் படி, சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள்கட்சியை தொடங்கினார்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

இந்தநிலையில், தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்த இவர் இன்று காலை உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

Leave a Reply