நமது உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் ஹிந்தி மொழிபற்றி சொன்னது முற்றிலும் உண்மை. !

ஏன்? எப்படி?

உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது என்று உங்களிடம் கேட்டால் , உடனே
சொல்வீர்கள், ஆங்கிலம் என்று,

நானும் அப்படித்தான் நினைத்துக்
கொண்டிருந்தேன்.

அது தவறு.

உலகில் அதிக மக்களால் பேசப்
படும் மொழி மாண்டரின் எனும்
சீன மொழிதான்.

மக்கள் தொகை கணக்கின்படி 140
கோடிபேர் அங்கு வாழ்கின்றனர். 90
கோடி பேர் மாண்டரின் மொழி பேசு
கின்றனர்.உலகின் மொத்த மக்கள்
தொகை 650 கோடி.

இந்தியாவின் மக்கள் தொகை 130
கோடி. ஹிந்தி மொழி பேசுவோரின்
எண்ணிக்கை 45 கோடி.

இதற்காக என் தமிழ்மொழியை
குறைத்து மதிப்பிடவில்லை. தமிழ்
மொழி தமிழகத்தில் 8 கோடி பேரா
லும், உலக நாடுகளில் 3 கோடி பேரால் பேசப்படுகிறது.

6 நாடுகளில் தமிழ் ஆட்சிமொழி.

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்,
மொரீஷியஸ், டோரண்டோ, மியன்மார் போன்ற நாடுகளில்
தமிழ் ஆட்சிமொழியாகவும், அலுவல் மொழியாகவும் உள்ளது.
இந்தோனேசியா, லண்டன், தாய்
லாந்து போன்ற நாடுகளில் தமிழர்
களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

ஹிந்தியைப் பற்றி பேசினாலே
ஸ்டாலின் அலறுவது ஏன் என்று
தெரியவில்லை.

நம்ம மொழி உலகெங்கும் ஆதிக்
கம் செலுத்தும் போது, நம்ம நாட்டு
மொழி, வளரக்கூடாது என்பது எந்த வகையில் நியாயம்?

உலக நாடுகள் தமிழ் மொழியை, தமிழர்களை புறக்கணித்திருந்
தால் என்னாவது?

மற்ற நாடுகளில் நம்ம தமிழ் மொழி
வளர்ந்தது அவர்களின் பெருந்
தன்மையைக் காட்டுகிறது. உள் நாட்டில் ஒரு மொழியை நாம் காரணமில்லாமல் எதிர்ப்பது தமிழனின் ஈனத் தனத்தைக் காட்டுகிறது.

உடனே இந்தி திணிப்பு என்ற பெயரில் முட்டாள் தீராவிடங்கள் கம்பு சுத்தக் கிளம்பவேண்டாம்… இந்தி திணிப்பை எதிர்ப்பது என்பது வேறு, இந்தி கற்பதையே எதிர்ப்பது என்பது வேறு…

இந்தி திணிப்பை நானும் எதிர்க்கிறேன்… விருப்பமுள்ளவன் கற்றுக்கொள்வதை தடுப்பதையும் நான் எதிர்க்கிறேன்…

Comments are closed.