‘ஹிந்து கடவுளை இழிவாகபேசிய காரப்பனை கைதுசெய்ய வேண்டும்; அவர், கோவிலில், ஊர் பெரியவர்கள் முன்னிலையில், கடவுளிடம் மன்னிப்புகேட்க வேண்டும்’ என, ஹிந்து இயக்கங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம், சிறு முகையில் உள்ள, ‘காரப்பன் சில்க்ஸ்’ உரிமையாளர் காரப்பன், கோவையில் நடந்த கருத்தரங்கில், அத்திவரதர் மற்றும் கிருஷ்ணர் பற்றி இழிவாக பேசினார். இவரை கைதுசெய்ய வலியுறுத்தி, ஹிந்து அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஹிந்து முன்னணியின் கோவை கோட்டசெயலாளர் ராஜ்குமார் கூறுகையில், ”காரப்பன் மீது, வழக்குப்பதிவு செய்யவேண்டும். அவர் சிறுமுகையில் உள்ள ராமர் கோவிலில் மண்டியிட்டு, ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் மன்னிப்புகேட்க வேண்டும்; இதுதான் எங்கள் கோரிக்கை,” என்றார்.

Comments are closed.