கார் கட்டுப்பாடு திட்டத்தை தோற்கடிக்க பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது என்ற முதல்வர் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு, பதிலடியாக, ‘‘கார்கட்டுப்பாடு திட்டத்தின் மூலம் மாநில அரசு நிதிமோசடி செய்வதாக பாஜக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து, பாஜ மாநிலத் தலைவர் சதீஷ் உபாத்யாயா கூறுகையில்,”கார் கட்டுப்பாடு திட்டத்தின்மூலம் நிதி மோசடியும், பொதுமக்களுக்கு தொந்தரவும்தான் ஏற்பட்டு வருகிறது. இதனைதான் பாஜ எதிர்க்கிறது. தேவைப்பட்டால், இத்திட்டத்தை எதிர்க்க மக்களிடம் முறையிடவும் செய்வோம். கடந்தமுறையே மக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் நிதிமோசடி நடந்தது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி அரசிடம் கேள்வி எழுப்பினோம். இம்முறை திட்டத்தில் தனியார் பேருந்துகள் பயனடைந்துள்ள வகையில், அரங்கேற்றப்பட்டுள்ள மோசடிகுறித்து விசாரணை நடத்த வலியுறுத்துகிறோம்” என்றார்.

Leave a Reply