“கார்பரேட் கம்பனிகளுக்காக கடலை மிட்டாய்க்கு வரிபோட்ட மோடி”ன்னு கதறிய காம்ரேட்டுகளும்,கார்பரேட்டுக்கு கடன் தள்ளுபடி, ஆனால் ஆடிக்கார் வைத்திருக்கும் ஏழை விவசாயிக்கு தள்ளுபடி யில்லையா என முழங்கிய விவசாய அத்தாரிட்டிகளும், பாசனத்துக்கு தண்ணியில்லை, கார்கம்பனி தேவையா? என படுத்துப்புரண்ட பசுமை பாதுகாவலர்களும்,

கார்பரேட் டாட்டாவுக்கும்,’பார்பான், பார்பான்’ என திட்டிய டி.வி.எஸ்-காகவும்,
பன்னாட்டு முதலாளித்துவ ஹுண்டாய், டொயோட்டா, சுசுகிக்காகவும், நீலிக் கண்ணீர் வடிப்பதை பார்க்கையில் அய்யகோ……..  சிவாஜி கணேசன் இந்த பச்சோந்தி கூட்ட நடிப்பின் முன் பிச்சையெடுக்கணும்!

ஜி.எஸ்.டியால்தான் வாகன விற்பனை சரிந்ததுன்னு சொன்ன இதே வாய்கள்தான்,
அன்று கார்ப்ரேட் முதலாளிகளுக்காக கொண்டுவரப்பட்டது ஜி.எஸ்.டின்னு சொல்லிச்சு.
அதாவது ‘ஆக வாய்புளித்ததோ… மாங்காய் புளித்ததோ?

ஆனால் இன்று இவ்வளவு பெரியநெருக்கடி இந்தியாவில் மட்டும்தான்(!) என , ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்க இவர்கள் படும்பாடு சொல்லிமாளாது.உண்மையில் இந்தபிரச்சனைக்கு ஆரம்பப்புள்ளி அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தக பனிப்போர்தான்.

இதன் விளைவாக பன்னாட்டு நிறுவனங்கள் பலவற்றின் பங்குகள் உலகளவில் ஆட்டம்கண்டது. விளைவு ஐரோப்பிய சந்தையும், பொருளாதாரமும் ஆட்டம்கண்டது. அதன் காரணமாக உலகளவில் வாகன விற்பனை சரியத் தொடங்கியது.

உலகளவில் வாகன விற்பனை சரிந்தால் இந்தியாவில் எப்படி பாதிப்பு வரும்ன்னு டவுட் வரலாம்.
ஆட்டோமொபைல் சந்தையில் அமெரிக்கா, சீனாவுக்கு நிகராக வாகனம் உற்பத்திசெய்து ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா.

இந்தியாவின் மாருதி தயாரிப்புகள் பல வெளிநாடுகளில் டொயோட்டா பெயரிலும், நிசான் பெயரிலும் விற்பனை ஆகுது.ஆப்ரிக்க நாடுகளில் சாலைகளை ஆக்கிரமித்திருக்கும் ஹுண்டாய் வாகனங்கள், தமிழகத்திலிருந்துதான் ஏற்றுமதி ஆகுது.ஒரகடம் நிசான் நிறுவனம் ஏற்றுமதியை நம்பி தான் இன்னும் ஓடுது.இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்ட ஜெனரல் மோட்டார்ஸ் வாகனங்கள் இன்னும் உற்பத்தியாகி ஏற்றுமதியாகிக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் அங்கு பொருளாதாரம் அடிவாங்கினால், மற்ற நாடுகளைவிட இந்தியாவிற்கு சற்று வலி அதிகமாகத்தான் இருக்கும்.ஏற்றுமதி குறையும்போது உற்பத்தி குறையும்,
உற்பத்தி குறையும்போது உதிரி பாக நிறுவனங்கள் பாதிக்கப்படும்.இதன் மூலம் வருவாய் இழக்கும் சூழல் வரும் போது மக்களின் வாங்கும் திறன் குறையும்.இது இன்னும் பாதிப்பை அதிகரிக்கும்.

இந்தியாவில் இந்த பாதிப்போடு BS – VI கைகோர்த்ததால் புதிய வாகனங்கள்,வருகை சற்று தாமதமாகும். இதனால் வாகனம்வாங்க நினைப்பவர்கள் கூட சற்று தள்ளிப்போடும் மனோநிலையில் தான் உள்ளனர்.

BS-VI விவகாரத்தில் அரசு போதிய காலஅவகாசம் கொடுத்தும், இந்த நிறுவனங்கள் முன்னெச்சரிக்கையின்றி தூங்கி வழிந்தன.முந்தைய அரசுகளை போல், இந்த அரசிடமும், கடைசி நேரத்தில் எப்படியாவது காலநீடிப்பு வாங்கலாம் என்னும் அலட்சியம்.

ஆனால் இது கண்டிப்பான அரசு என புரிய ஆரம்பித்ததும், இப்போது அவசரகதியில் இறங்கிருக்கிறார்கள்.BS-VI என்பது சாதாரண விசயமல்ல. மிகவும் சிக்கலான தொழில் நுட்பம் அது. பெட்ரோல் வாகனங்களைவிட டீசல் இன்னும் சிக்கலானது. அதனால்தான் மாருதி தனது சிறிய ரக கார்களில் டீசல்வாகனம் அடுத்த இருவருடங்களுக்கு இல்லை என அறிவித்துள்ளது.

இந்த BS-VI இந்திய அரசால் கொண்டு வரப்பட்டதல்ல என்பதனை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
இது ஐ.நாவின் புவி வெப்ப மயமாதலை தடுக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச ஒப்பந்தத்தின் படி அனைத்து நாடுகளுக்கு பொதுவானது. அதன் ஒருபகுதிதான் இந்த BS-VI.
ஆனால் “பூவுலகின் மாமாக்கள்” என கூறும் யாரும் இதுபற்றி அரசுக்கு ஆதரவாக வாய்திறக்க மாட்டார் .

எலெக்ரிக் வாகனங்கள் வந்தாலும், எரிபொருளில் இயங்கும்வாகனம் தொடரும் என அரசு தெளிவாக அறிவித்துள்ளது.அமெரிக்காவில் அளவில்லா வீட்டுக்கடன் குடுத்து, தேவைக்கதிகமான வீடுகளை கட்டி கடைசியில் அதன்பலனை 2012ல் உலகமே அனுபவித்தது. அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கியும், உலகின் மிகப் பெரிய கார்நிறுவனமும் ஒரேநேரத்தில் திவால் நோட்டீஸ் கொடுத்தது வரலாறு!

அது போல் வாகன விற்பனை சந்தை போட்டியில், அளவு கடந்தவளர்ச்சி விகிதத்தை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எட்டியது. அது சீரான வளர்ச்சியை தாண்டி வீக்கமாகிபோனது.

இப்போது வரிக்குறைப்பு கொடுக்க வேண்டுமென்கிறார்கள். உண்மையில் வரியை மொத்தமாக தள்ளுபடி செய்தாலும் இதேநிலைதான் தொடரும். காரணம் இந்தவீழ்ச்சிக்கு மூலகாரணம் வேறு.

ஒருவேளை வரிச்சலுகையை அரசு அறிவித்திருந்தால், இந்த திடீர் கார்ப்பரேட்பக்தர்கள், இந்நேரம் மத்திய அரசினை, ‘அம்பானி , அதானி, இளநீர், பதநீர்’ன்னு வசைபாடிக்கொண்டிருப்பார்கள். அப்படி வரிச்சலுகை கொடுத்து கார்பரேட்டுகளை காப்பாற்ற நினைத்திருந்தால் கிங் பிஷர் இன்னும் பறந்து கொண்டிருக்கும். !2020 காலண்டருக்கு அழகிகள் தேர்வு முடிந்திருக்கும்.ஆனால் இன்றுவிவசாயி வாங்கும் 6000 ரூபாய் இல்லாது போயிருக்கும்.வீடில்லாத வனுக்கு கிடைக்கும் இரண்டரை லட்சம் கனவாகியிருக்கும்.

Comments are closed.