நடிகர் விஜயின் தந்தை ஒரு பேட்டியில் ரஜினி படம் காலா எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என்பதற்கு ஒரு முக்கியக் காரணத்தை கூறியுள்ளார். தூத்துக்குடி போராட்டத்தில் கடைசி நாளாகிய நூறாவது நாளில் சமூகவிரோதிகள் புகுந்துவிட்டனர் என்று ரஜினி உண்மையை சொல்லியதால்தான் காலா படம் ஊற்றிக்கொண்டது என்று பொருள் தரும்விதத்தில் பேசியுள்ளார் எஸ் ஏ சந்திரசேகர்.

காலா படம் வெளிவரும் முன்னரும், தூத்துக்குடி நிகழ்ச்சி பற்றி ரஜினி கருத்துவெளியிட்ட பின்னரும் , தூத்துக்குடி கலவரத்துக்கு காரணமானவர்களும், அந்த கலவரத்தின் சூத்திரதாரிகளும், காலா படம் எப்படியாவது தோற்றுவிட வேண்டும் என்று பிரார்த்தித்தனர். இந்த தோல்வியுடன் ரஜினி அரசியலே நமக்குவேண்டாம் என்று பயந்து ஒதுங்கிவிடும் சூழலை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு, முகநூலிலும், இன்னபிற பலஇணைய தளங்களிலும் காலாவினை தோல்வி அடைய செய்யவேண்டும் என்று .கங்கணம் கட்டி வந்ததை அனைவருமே அறிவோம்.

எரிகிற கொள்ளிக்கு மேலும் மேலும் எண்ணைவார்த்த கதையாக அந்த படவசனங்கள் மற்றும் காட்சிகளில் பா.ரஞ்சித் எழுதிய வெட்டிவசனங்கள் அந்த படத்துக்கு முழுவதும் தீங்கு விளைவித்தன.

ரஜினி தூத்துக்குடி சம்பவம் மற்றும் சமூக விரோதிகள் பற்றி தெளிவான கருத்து சொன்னதால்தான் இந்த படம் இந்த அளவாவது ஓடியது. இல்லை என்றால் இந்த படத்தில் உள்ள அழுகுணி வசனங்கள் மற்றும் இந்துவிரோத காட்சிகளுக்காக முழு சங்கு ஊதி இருப்பார்கள் நம்மக்கள்..

ரஜினி ஒருமாபெரும் சக்தி. ஒரே ஒருபடத்தின் வெற்றியோ அல்லது ஒரே ஒரு படத்தின் படுதோல்வியோ அவரை எந்த விதத்திலும் அசைத்துவிட முடியாது. கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் எறிபவன் முழு முட்டாள். விஜய் அவர்களின் தந்தை ஒரு சினிமா டைரக்டர் என்பது அனைவரும் அறிந்ததே . ரஜினி தெரிவித்த கருத்து பொதுவாழ்வில் உள்ள ஒருநிகழ்ச்சி பற்றியது. அதனால் படம் ஓடவில்லை என்பது ஒரு திசை திருப்பும் விஷமத்தனமான கருத்து.

இந்தக் காலா படத்துக்கு பாலூற்றிய பெருமை பா ரஞ்சித்துக்கே சேரும். அந்த உண்மையை மூடி மறைக்கும் இந்தக் கிறித்தவ மதமாற்றக் கும்பல் , ரஜினியின் அரசியல் கருத்துக்களே படத்தோல்விக்கு காரணம் என்று சொல்வது யாரை ஏமாற்றும் வேலை ?

வேறு எந்தமதத்தவரையும் வில்லனாக சினிமாவில் காண்பித்தால் இந்நேரம் தியேட்டர்கள் என்ன பாடுபட்டிருக்கும் என்பது நாம் அறிந்ததே .

அதே சமயம் வேறு சில மதத்தவரை வில்லனாக படத்தில் காண்பித்தால் ரோட்டில் நிற்கும் இருசக்கர நாலு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை கூட கொளுத்திவிடுகிரார்கள்.

ரஜினி அரசியலில் தலை எடுப்பது தங்கள் கட்சிக்கு பெரிய ஆபத்தாகிவிடும் என்று அச்சப்படுகிற , தமிழகத்தில் பலலட்சம் கோடி கொள்ளை அடித்த கட்சிகளும், கொள்ளை அடிக்க வாய்ப்பு வேண்டும் என்று விரும்பும் கட்சிகளும் மறைமுகமாக ரஜினிக்கு எதிராக பல்வேறு விதங்களில் நரித்தந்திரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தூத்துக்குடி நூறாவது நாள் போராட்டத்தின் போது, சமூகவிரோதிகள் உள்ளே புகுந்து போலீசை தாக்க ஆரம்பித்தனர் என்பது முழு உண்மை. ரஜினி அந்த உண்மையை சொன்னதால்தான் , தமிழகம் முழுவதும் பாராட்டுப் பெற்றார். இதனை மூடி மறைத்து , திசைதிருப்பும் எஸ் ஏ சந்திர சேகரின் பேச்சை கேட்டு யாரும் ஏமாற மாட்டார்கள். அனைவருமே உண்மையை அறிவார்கள்.

Leave a Reply