திருவள்ளூர் மாவட்ட பாஜக. செயற்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுவாதி கொலைவழக்கில் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளி என சந்தேகிக்கப் படும் நபரை போலீசார் கைது செய்தது பாராட்டுக்குரியது. இருப்பினும், மாநிலத்தில் பல்வேறு கொலைவழக்குகள் காவல்துறையால் கண்டு கொள்ளப்படாமலும், துப்பு துலக்கப்படாமலும் உள்ளன.

குறிப்பாக பாஜக. பிரமுகர்கள், அதன் சகோதர இயக்கங்களை சேர்ந்த பிரமுகர்கள் தொடர்பான கொலைவழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தமிழக காவல்துறை மெத்தனம்காட்டி வருகிறது. இதற்குகாரணம் காவல் துறையில் உள்ள ஆள்பற்றாக் குறை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள்.

எனவே, தமிழக முதல்வர் காவல்துறையை மேம்படுத்த உரியநடவடிக்கை எடுக்கவேண்டும். குற்றங்கள் குறைய வேண்டுமானால், பள்ளிகளில் தினந் தோறும் காலையில் நன்னெறி வகுப்புகளை நடத்த வேண்டும். இதுகுறித்து கல்வித்துறை முறையான அறிவிப்பை வெளியிடவேண்டும்.

தமிழக எல்லையில் ஆந்திரமாநில அரசு பாலாற்றில் தடுப்பணையை உயர்த்தி கட்டியது கண்டனத்துக்குரியது. இதற்குக்காரணம் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கும், முறையாக கண்காணிக் காததும்தான் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply