குற்றவாளிகளின் கூட்டாளிகள் காவிரி ஆணையத்திற்கு பாராட்டு சொல்லாதது ஏன்?

நடிகர் கமலகாசன் தலைமையில் கூடிய அரசியல்வாதிகள், காவிரி மேலான்மை வாரியம் அமைத்த பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜக அரசையும் ஏன் பாராட்டவில்லை?

நாடு சுதந்திரம் அடைந்தபோது 39 ஆயிரத்திற்கும் மேலாக ஏரி குளங்கள் இருந்தது! அதற்கான வரத்து கால்வாய்கள்! போக்கு கால்வாய்கள் இருந்தன! இப்போது ஏறத்தாள 8 ஆயிரம் தான் இருக்கிறது! முப்பதொராயிரம் ஏரி குளங்களையும் அதற்கான கால்வாய்களையும் திமுகவினரும் காங்கிரஸ் காரர்களும் ஆக்கிரமித்துள்ளார்கள்! இந்த ஆக்கிரமிப்பை மீட்டெடுக்காமல் தூர்வாரப்போவதாகச்சொல்வது, ஆக்கிரமிப்பாளர்களை அங்கீகரிக்கும் செயலாகும்!

தூர்வாரப்புறப்படும் முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்! தூர்வாருகிறோம் என பணம் திரட்டி கொள்ளையடிக்க துடிக்கும் அரசியல் கட்சிகளே, ஆக்கிரமிப்பை அகற்ற முற்படாதது ஏன்?

ஏனென்றால் இவர்களெல்லாம் நடிகன் தலைமையில் செயல்படும் குற்றவாளிகளின் கூட்டாளிகள்!

காவேரியின் பெயரில் கூட்டம் போட்ட இவர்கள் காவேரி மேலான்மை வாரியம் அமைத்த மத்திய பாஜக அரசை ஏன் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றவில்லை?

நாடு சுதந்திரமடைந்த பிறகு கூட்டணியாகவே பல ஆண்டுகள் ஆட்சி செய்த திமுகவும் காங்கிரசும் காவிரி பிரச்சனையில் கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்பட்டது ஏன்?

இப்போதுகூட நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் திமுகவும் காங்கிரசும் கர்நாடக காங்கிரசுக்கு ஆதரவாக தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதை கண்டிக்காதது ஏன்?

தேர்தல் அறிவிக்கப்பட்ட காரணத்தால் சீதாராமையா செயலற்றுப்போனதை பயன் படுத்திதான், மத்திய பாஜக அரசு கர்நாடகத்தின் சார்பிலும் அதிகாரிகளை நியமணம் செய்து காவிரி ஆணையத்தை உருவாக்கியது!

காங்கிரஸ் முதல்வர் இருந்திருந்தால் இதை சாதித்திருக்க முடியாது!

காவிரி ஆணையம் பாஜகவின் சாதனையாகும்!

இதை பாராட்டாமல் காவிரி பெயரில் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா?

சினிமாவில்தான் அவர்களின் இஷ்டப்படி கதையை மாற்றி அமைப்பார்கள்! தேவைப்பட்டால் எந்த கதாபாத்திரத்தையும் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்வார்கள்!

இது சினிமா இல்லையே!  அரசியல் கூட்டம் நடத்தினால் அரசியல் நிகழ்வுகளுக்கு கருத்து சொல்லியாகவேண்டும்! காவிரி ஆணையம் அமைக்கப்பட்டதற்கு உங்கள் கருத்து என்ன? மகிழ்ச்சியா? இனி காவிரி அரசியல் செய்யமுடியாதே என்னும் அதிர்ச்சி கவலையா?

காவிரி ஆணையம் அமைத்திடுக காவிரி மேலான்மை வாரியம் அமைத்திடுக என எத்தனை வேளை தீர்மானம் போட்டீர்கள்!

மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தீர்கள்!

இன்று உங்களின் கோரிக்கையை மத்திய பாஜக அரசு நிறைவேற்றிவிட்டது!

பாராட்ட வேண்டாமா? ஏன்பாராட்டவில்லை? ஏனென்றால் உங்களின் கள்ளப் பணங்களை மோடி செல்லாபணமாக மாற்றிவிட்டார்! அதன் காரணமாகத்தான் மோடி செய்த சாதனைக்கு பாராட்டு சொல்ல மறுக்கிறீர்கள்!

இந்த உண்மைகளை மக்கள் புரிந்துகொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை!

–    குமரிகிருஷ்ணன்

Leave a Reply