மார்த்தாண்டத்தில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர்கூறியதாவது:-

காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். தமிழகத்தின் நீர்தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதற்கு பாரதிய ஜனதா 100 சதவீதம் துணை நிற்கும்.

இப்பிரச்சனை தொடர்பாக நேற்றுகூட டெல்லியில் மத்திய மந்திரி நிதின் கட்கரியை சந்தித்து பேசினோம். அவரிடம் தமிழக நீர் தேவைகள் குறித்து எடுத்து ரைத்தோம். அவற்றை கவனமாக கேட்டுக் கொண்டதோடு இப்பிரச்சனைகளை தீர்த்துவைக்க முயற்சி மேற்கொள்ளப் படுமென்று தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் முக்கிய இடங்களில் ஸ்கீம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இதனால் பல்வேறு யூகங்கள் கிளம்பி உள்ளன. அதற்கு விளக்கம்காணவே மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது.

காவிரி பிரச்சனைக்கு தீர்வுகாண மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுகருத்தில்லை. இதற்காக பாரதிய ஜனதா முயற்சி செய்து வருகிறது.

நவநீதகிருஷ்ணன் என்னிடம் பேசும் போது எதுவும் கூறவில்லை. இப்பிரச்சனையை அரசியல் ஆக்க காங்கிரஸ் பல்வேறு வழிகளில் முயற்சி செய்துவருகிறது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கதேர்தல் முறையாக நடத்தவில்லை. பல்வேறு குளறுபடிகள் நடக்கிறது. ஆளும்கட்சியினரின் விருப்பப்படி தேர்தல் நடக்க வேண்டுமென்றால் அதுதேர்தலே இல்லை.

தேர்தலை நியாயமாகவும், முறையாகவும் நடத்தவேண்டும். அப்படி எதுவும் இப்போது நடக்கவில்லை. இப்போது நடந்ததேர்தலை முழுமையாக ரத்துசெய்து விட்டு மீண்டும் புதிதாக தேர்தலை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:

Leave a Reply