காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமை யாவை, முக. ஸ்டாலின் நேரில்சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில்சந்திக்க வேண்டும்.

அந்த சந்திப்பின் போது, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஏன் தண்ணீர் தரமறுக்கிறீர்கள் என்று இருவரும் கேட்கவேண்டும். தமிழகத்தில் இருந்து கொண்டு காவிரிக்காக குரல்கொடுக்கும் இருவரும், இதை ஏன் செய்யவில்லை. திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply