உத்தரபிரதேசத்தில் காஷ்மீரி வியாபாரிகள் தாக்கப்பட்ட விவகாரத்தை பற்றி பேசிய பிரதமர் நரேந்திரமோடி, சில வெறிபிடித்தவர்கள் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டதாகவும், மக்கள் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டியநேரம் இது, என்றும் கூறினார்.

 

உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், 3 காஷ்மீரி வணிகர்களை சிலர் பிரம்பால் அடித்துதாக்கினர். புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, ஒரு சில பகுதிகளில் காஷ்மீரிகள் மீது நடைபெறுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தநிலையில், வீடியோவில் பதிவான லக்னோ சம்பவம், நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து இன்று கான்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் விடுத்தார். நாட்டில் ஒற்றுமை நிலவவேண்டிய தருணம் இது என்றும் பிரதமர் கூறினார். நாட்டில் தற்போது ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டிய தருணம் இது. லக்னோவில், காஷ்மீரி சகோதரர்கள் மீது சிலவெறிபிடித்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். உத்தர பிரதேச அரசு இதுகுறித்து உடனடி விசாரணை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார் மோடி

Tags:

Leave a Reply