காஷ்மீரில் பாஜக அலுவலகம் அருகே குண்டுவீச்சு தாக்குதல் நடந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள பாஜக அலுவலகம் அருகே சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. ஸ்ரீநகரின் ராஜ்பாக் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் அருகே நடந்த இச்சம்பவத்தால் தொண்டர்கள் பலரும் அதிர்ச்சி யடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் யாருக்கும் எந்தவிதபாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பாக ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி ராஜ்பாக்குலாம் மொய்தீன் கூறுகையில், குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்த போது நான் அப்பகுதியில் தான் இருந்தேன். இதில், யாருக்கும் எந்தவிதபாதிப்பும் ஏற்படவில்லை. மக்களை பயமுறுத்தவே இது போன்ற தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலிசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply