ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, ரத்து ய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.லடாக், காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டு சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.

இந்நிலையில் அங்கு இயல்புநிலை திரும்பி வருகிறது. அங்கு வேலைவாய்ப்பினை உருவாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. ஜம்முகாஷ்மீர் பகுதியில் இருந்து 29000 இளைஞர்கள் இந்திய இராணுவத்தில்சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் ஆப்பிள்கள் உலக புகழ்பெற்றவை. ‘காஷ்மீரில் இருந்து நாட்டின் மற்றபகுதிகளுக்கு, நாள் ஒன்றிற்கு 750 டிரக் ஆப்பிள்கள் கொண்டு செல்லப் படுகின்றன, என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் கூறினார்,

இந்நிலையில் ஜம்மு காஸ்மீர் பகுதிகளில் விளைவிக்கப்படும் ஆப்பிள்களை விவசாயிகளிடம் இருந்து, நேரடியாக மத்தியஅரசு கொள்முதல்செய்யும் என அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இது அங்கு இருக்கும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்புகுறித்து, மத்திய அரசு அதிகாரிகள் கூறியது நபெட் எனப்படும், தேசிய வேளாண் கூட்டுறவு வர்த்தக கூட்டமைப்பு மூலம், ஜம்முகாஷ்மீர் விவசாயிகளிடமிருந்து நேரடியாக ஆப்பிள்கள் கொள்முதல் செய்யப்படும்.

ஜம்மு – காஷ்மீரில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆப்பிள்கள், சோபூர், ஷோபியான் மற்றும் ஸ்ரீ நகரில் உள்ள மொத்த கொள்முதல் நிலையத்தில் , கொள்முதல் நடத்தப்பட்டு தரம் ,பிரிக்கப்படும் . கொள்முதல், டிசம்பர், 15-க்குள் முடிக்கப்படும். ஆப்பிள்களுக்க்கான உரியவிலையை, தேசிய தோட்டக்கலை வாரிய உறுப்பினர் அடங்கியகுழு நிர்ணயிக்கும் எனவும் . ஆப்பிள்களின் தரத்தை சோதனைசெய்து பிரிக்கும் தர நிர்ணயம் செய்யும் குழுவும் அமைக்கப்படும்.

இதற்காக மாநில அளவில், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக, ஜம்மு – காஷ்மீர் தலைமைச் செயலர் இருப்பார். மத்திய வேளாண் அமைச்சர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர், இந்தக்குழுவில் இடம்பெறுவர். விவசாயிகளுக்கான கொள்முதல் விலை, நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Comments are closed.