காஷ்மீர் கவர்னரின் ஆலோசகராக மாஜி ஐ.பி.எஸ்.அதிகாரி விஜய குமார் நியமிக்கப் பட்டுள்ளார்.


காஷ்மீரில் பா.ஜ. , பி.டி.பி. கூட்டணி ஆட்சிமுறிந்தது. முதல்வராக இருந்த மெகபூபாமுப்தி நேற்று ராஜினமா செய்தார். இதையடுத்து அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப் பட்டது.இந்நிலையில் கவர்னர் வோராவிற்கு ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., விஜயகுமார், பி.பி.வியாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேலும் புதியதலைமை செயலாளராக பி.வி.ஆர். சுப்பிரமணியத்தை கவர்னர் வோரா நியமித்தார். இவர் 1987-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.கேடராவார்.
 

கவர்னரின் ஆலோசகராக நியமிக்கப் பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான விஜய குமார் தமிழகத்தை சேர்ந்தவராவார். இவர் சந்தனமர கடத்தல் வீரப்பனை சுட்டுக்கொன்ற சம்பவத்திலும், நக்சலைட்டுகளை ஒழிப்பதிலும், முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply