காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரளவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த எதிர்க் கட்சி தலைவர்கள் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துபேசினர். சுமார் 75 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட அரசியல் ரீதியான தீர்வை காணவேண்டும் என அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ‘‘காஷ்மீரில் நிகழ்ந்த கலவரத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இந்நாட்டை சேர்ந்தவர்களே. இளைஞர்கள், பாதுகாப்புபடையினர், போலீஸார் ஆகியோர் உயிரிழந்திருப்பது மிகுந்த மன வலியை ஏற்படுத்துகிறது. இந்த விவகாரத்தில் ஜம்முகாஷ்மீர் மாநில அரசுக்கு, மத்திய அரசு உறுதுணையாக நிற்கும். அனைத்து எதிர்க்கட்சிகளும் பாரபட்சமின்றி பொதுமக்களை சந்தித்து அமைதியை ஏற்படுவதற்கான வழியை காணவேண்டும்.

அரசமைப்பு சட்டத்துக்கு உட் பட்டு நிரந்தரமான மற்றும் நீடித்ததீர்வு காண வேண்டியது அவசியம். மேலும் காஷ்மீர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரளவேண்டும்’’ என்றார்.

Leave a Reply