காஷ்மீரில் ஹிஸ்புல்முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதால் கடந்த 2 மாதமாக அங்கு வன்முறை நிகழ்ந்துவருகிறது. 

இதனால் காஷ்மீர் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, ஜித்தேந்திரசிங் மற்றும் பா.ஜ.க. தேசியதலைவர் அமித்ஷா ஆகியோர் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது காஷ்மீரில் அமைதி நிலவ எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.

காஷ்மீர் மாநிலத்தைசேர்ந்த அனைத்து கட்சி தலைவர்களை செப்டம்பர் முதல் வாரத்தில்கூட்டி பேச்சுவார்த்தை நடத்துவது என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply