காஸ் மானியம் ரத்து செய்யப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

 

இதுகுறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜ்ய சபாவில் விளக்கம் அளித்து பேசுகையில், காஸ்மானியம் ரத்து செய்யப் படாது. இந்த மானியம் முறைபடுத்தப்படும். எம்.பி.,க்கள் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அமளியில் ஈடுபடுவது தேவையற்றது. யாருக்கு சிலிண்டர்மானியம் தேவை. யாருக்கு தேவையில்லை என்பது பற்றி விரைவில் முடிவுசெய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply