மேகாலய மாநிலம், மெளஃப்லாங் கிராமத்துக்கு சனிக் கிழமை சென்ற பிரதமர் நரேந்திரமோடி, அங்கு "காசி' பழங்குடியினருடன் இணைந்து, அவர்களின் "கா போம்' பாரம்பரிய இசைக் கருவியை இசைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.


 மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற, வட கிழக்குப் பிராந்திய கவுன்சிலின் 65-ஆவது மாநாட்டில் நரேந்திரமோடி பங்கேற்றார். அதைத்தொடர்ந்து அவர், ஷில்லாங்கிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள வனங்களின் வனப்புநிறைந்த மெளஃப்லாங் கிராமத்துக்கு சனிக் கிழமை சென்றார். அங்கு வசிக்கும் "காசி' பழங்குடியின மக்களுடன் இணைந்து, அவர்களின் "கா போம்' உள்ளிட்ட பாரம்பரிய இசைக் கருவிகளை மோடி வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.


 தொடர்ந்து பழங்குடியின பிரதிநிதிகளுடன் உரையாடிய மோடி, மெளஃப்லாங் வனப்பகுதி இயற்கை எழில் கொஞ்சும் அற்புத இடமாகத்திகழ்வதை குறிப்பிட்டு, இதற்கு பழங்குடியின மக்கள் ஆற்றிவரும் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினார்.


 மேகாலய மாநில ஆளுநர் சண்முகநாதன், முதல்வர் முகுல் சங்மா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Leave a Reply