உத்தரப்பிரதேச மாநிலம், பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான வாராணசியில், ஜோகியாபூர் கிராமத்தில், பாஜக தேசியதலைவர் அமித் ஷா, தலித் குடும்பத்தினருடன் செவ்வாய்க் கிழமை மதிய உணவை அருந்தினார்.


 இதுகுறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் சஞ்சய் பரத்வாஜ் தெரிவித்ததாவது: அலாகாபாதில் விவசாயிகள் நடத்திய பேரணியில் கலந்துகொள்வதற்காக அமித் ஷா சென்று கொண்டிருந்தார். அப்போது பிந்த் சமூகத்தினர் (மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சமூகம்) அதிகம்பேர் உள்ள ஜோகியாபூர் கிராமத்துக்கு சென்றார்.


 அவருக்கு அப்பகுதிமக்கள் உற்சாகமான வரவேற்பளித்தனர். இதைத்தொடர்ந்து கிரிஜா பிரசாத் பிந்த் மற்றும் இக்பால் பிந்த் ஆகியோரது இல்லத்துக்குச் சென்ற அவர், அங்கு பரிமாறப்பட்ட உணவை ருசித்தார்.

Leave a Reply