நாட்டில் கிராமப்புறங்களில் மொபைல்போன் சேவையை விரிவுபடுத்த மத்திய அரசு தீவிரம்காட்டி வருகிறது.தற்போது நாட்டில் 55,669 கிராமங்களில் மொபைல் நெட்வொர்க்வசதி இல்லாத நிலை காணப்படுகிறது. , விரைவில் அங்கும் மொபைல் கவரேஜை ஏற்படுத்தி அங்கு மொபைல்போன் சேவைகளை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மொபைல் நெட்வொர்க் கவரேஜ் இல்லாத கிராமங்களின் எண்ணிக்கை மாநிலங்கள் வாரியாக பின்வருமாறு:-

ஒடீசா – 10,398 கிராமங்கள்

மத்திய பிரதேசம் – 5,926 கிராமங்கள்

ஜார்கண்ட் – 5,949 கிராமங்கள்

மகாராஷ்டிரா – 4,792 கிராமங்கள்

ஆந்திரா – 3,812 கிராமங்கள்

அருணாச்சல பிரதேசம் – 2,886 கிராமங்கள்

சத்தீஸ்கர் – 4,041 கிராமங்கள்

பீகார் – 2,534 கிராமங்கள்

அசாம் – 2,885 கிராமங்கள்

தற்போது ஏற்கனவே ஜம்முகாஷ்மீர், இமாச்சலபிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் 4,752 கிராமங்களிலும், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் 2,138 கிராமங்களிலும் கவரேஜை மத்தியஅரசு விரிவுபடுத்திவருகிறது.

Leave a Reply