குஜராத்தில் தீவிரவாதி சொரபுதீன் ஷேக் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவிடம் மறுவிசாரணை நடத்தவேண்டிய எவ்வித தேவையும் இல்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

2005 ஆம் ஆண்டு சொரபுதீன் ஷேக் குஜராத் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். சொரபு தீன்ஷேக் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்- இ தொய்பா அமைப்புடன் தொடர்பு டையவர் என கூறப்பட்டது.அவர் போலீஸ் வாகனத்திலிருந்து தப்பிக்கும்போது பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிசூடு நடந்தது. இதில் சொரபுதீன் சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னர், வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட சொரபுதீன் கூட்டாளி துளசி பிரஜாபதியும் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.

 

ஆனால், இது போலீசார் நடத்திய போலிஎன்கவுன்டர் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டினர். இதையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப் பட்டது. 2012ல் என்கவுன்டர் வழக்கை கையில் எடுத்த சிபிஐ. சம்பவத்தின்போது குஜராத் மாநில உள்துறை அமைச்சராக பதவியில் இருந்த அமித்ஷா உள்ளிட்ட முக்கிய போலீஸ் உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது.

 

சிபிஐ. தனது விசாரணை அறிக்கை மும்பை கோர்ட்டில் தாக்கல்செய்தது. இதைதொடர்ந்து 2014 ஆம் ஆண்டில் அமித் ஷாவிற்கும் என்கவுன்டர் சம்பவத்திற்கும் தொடர்புஇல்லை என கோர்ட் தீர்ப்பளித்தது. மேலும், அரசியல் காரணங்களுக்கு அமித்ஷா இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் அமித்ஷா வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

 

ஹர்ஷ் மந்தேர் என்பவர் அமித் ஷாவிடம் மீண்டும் விசாரணை நடத்தவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலவழக்கு ஒன்றை தாக்கல்செய்தார். இதை விசாரித்த நீதிபதி அமித் ஷாவிற்கும் என்கவுண்டர் சம்பவத்திற்கும் தொடர்புஇருப்பதாக எவ்வித ஆதாரங்களும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட வில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

Leave a Reply