குஜராத் மாநிலத்தில், விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது.இந்தத் தேர்தலை யொட்டி,ஆளும் கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சி பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, 'மாநிலத்தில் உள்ள 25 லட்சம் விவசாயி களுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை வட்டி யில்லாக் கடன் வழங்க ப்படும்' என்றும், 'விவசாயக் கடனுக்கான ஏழு சத விகித வட்டியை, மத்திய மற்றும் குஜராத் மாநில அரசு ஏற்றுக் கொள்ளும்' என்றும் அறிவித் திருந்தார். இந்த நிலையில், அரசு ஊழியர் களுக்கும் பள்ளி ஆசிரியர் களுக்கும் சம்பள உயர்வை அறிவித் திருக்கிறது குஜராத் அரசு. இதுவரை, ஆண்டு குடும்ப வருமானம் 1.50 லட்சம் வரை இருப்பவர் களுக்கு 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள இலவச மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இதை மாற்றி, இனி 2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர் களும் 2 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்' என்று அறிவித் திருக்கிறார், மேலும், 'மேல்நிலை மற்றும் உயர் நிலைப் பள்ளி ஆசிரியர் களுக்கு ஐந்தாண்டு க்கு ஊதியம் மாறா வகை யில் ஒவ்வொரு மாதமும் சம்பளமாக 16,500 ரூபாய் வழங்கி வந்துள்ள நிலையில், இனி மாதச் சம்பளமாக 25,000 ரூபாய் வழங்கப் படும். இதைப் போலவே, நிர்வாக உதவி யாளராக இருப்பவர்கள் 11,500 ரூபாய் சம்பளமாகப் பெற்று வருகிறார்கள். இனி, 19,950 ரூபாய் சம்பளமாகப் பெறுவார்கள்" என்றும் அறிவித்தவர், 'ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை க்காக மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பணியாளர் களுக்கும் சம்பள உயர்வை' அறிவித் திருக்கிறார் துணை முதலமைச்சர் நிதின் பட்டேல்.

Leave a Reply