182 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட குஜராத்மாநிலத்தில் வரும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ்  தீவிர களப்பணியாற்றி வருகிறது. அதேசமயம் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க. வியூகம் வகுத்துள்ளது. இதற்காக வேட்பாளர்களை கவனமாக தேர்வு செய்து அறிவித்து வருகிறது.

அவ்வகையில், 34 வேட்பாளர்கள் அடங்கிய இறுதிவேட்பாளர் பட்டியலை பா.ஜ.க.  வெளியிட்டுள்ளது. அதில், லால்ஜிபாய் பிரஜாபதி (பாலன்பூர்),  ஜெய் நாராயண்பாய் வியாஸ் (சித்பூர்) ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். ரதோன்பூர் தொகுதியில் லாவிங்ஜி தாக்கோர் போட்டியிடுகிறார்.

Leave a Reply