குஜராத் மக்கள் சாதி அரசியலை எப்போதோ கடந்து விட்டதாகவும், அவர்கள் வளர்ச்சிக்காக வாக்களிப்பார்கள் என்றும் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில்பேசிய அவர், குஜராத் மாநிலத்தின் புதல்வன் நரேந்திர மோடி என்றும், அதை யாரும் மறுக்க முடியாது என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியினர் குஜராத்மாநிலத்தை மீண்டும் மீண்டும் குறை கூறுவதாக குற்றஞ்சாட்டிய அமித்ஷா, குஜராத் மக்கள் சாதி அரசியலை எப்போதோ கடந்து விட்டதாக தெரிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தை புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்ல பாஜக உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்த அமித் ஷா, பட்டேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அவர்களை முட்டாளாக்கு வதாகவும் விமர்சித்தார்

Leave a Reply