குஜராத்தில் 3 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைவர் அமித்ஷா, அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் தரப்பில் சோனியாகாந்தியின் அரசியல் ஆலோசகர் அகமதுபடேல் களத்தில் உள்ளார். அவர் வெற்றி பெற 45 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு 57 எம்எல்ஏக்கள் இருந்தனர்.

இந்நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலா அண்மையில் கட்சியில் இருந்து விலகினார். அவரது ஆதரவாளர்களான 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களில் பாஜகவில் இணைந்த பல்வந்த்சிங் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அகமது படேல் வெற்றி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் அகமதாபாத்தில் உள்ள தனது வீட்டில் அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் மாநில முதல்வர் விஜய்ரூபானி, கட்சி மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது மாநிலங்களவை தேர்தல் வியூகம்குறித்து விவாதிக்கப்பட்டது.

Leave a Reply