குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசாரங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்.குஜராத் தேர்தலில் பாரதீய ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறி உள்ளார்.

குஜராத் மாநிலத்தில் 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என தேசிய தலைவர் அமித் ஷா இலக்கு நிர்ணயம் செய்து உள்ளார், அந்த இலக்கையும் தாண்டி நாங்கள் வெற்றி பெறுவோம்,” என கூறியுள்ளார் யோகி ஆதித்யநாத்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சனம் செய்து உள்ள யோகி ஆதித்யநாத், “ராகுல் காந்தி தேர்தல் வரும்போது மட்டுமே செயல்படுவார். தேர்தல் முடிந்ததும் மாயமாகி விடுவார், வளர்ச்சிக்காக அவர் எதுவும் செய்ய வில்லை,” என்றார். ராகுல் காந்தி தன்னுடைய பாராளுமன்ற தொகுதியான அமேதிக்கு கூட வளர்ச்சிக்காக எந்தஒரு பணியும் செய்ய வில்லை எனவும் விமர்சித்து உள்ளார் யோகி ஆதித்யநாத்.

One response to “குஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெறும் : யோகி ஆதித்யநாத்”

Leave a Reply