குஜாராத் பயணத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று (அக்.7) தொடங்கினார். ஒரு மாதத்திற்குள் 2-வது முறையாக குஜராத் வரும் பிரதமர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இம்முறை 2 நாட்கள் பயணத் திட்டத்தில் சுமார் ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டி தொடங்கி வைக்கவிருக்கிறார்.

இந்த இரண்டு நாள் சூறாவளிச் சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மோடி சுமார் 6 பொதுக் கூட்டங்களில் பேசுவதோடு மாநிலத்தின் 3 பகுதிகளில் 5 திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.

துவார் காதீஷ் கோயிலுக்கு வருகைதந்த மோடி அங்கு வழிபாடுமுடித்து விட்டு வெளியில் காத்திருக்கும் மக்களை நோக்கி கையசைத்தார், சிலருடன் கைகுலுக்கினார்.

துவாரகாவில் 4 வழிப்பாதை தொங்குபாலத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டினார். இந்தப்பாலம் ரூ.96242 கோடி செலவில் கட்டப்பட்டுவருகிறது. இது கோயிலுக்கு இரண்டு கிமீ தொலைவில் ஏற்படும். தற்போது பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு கடலில் தனியார் மற்றும் குஜராத்வாரியம் நடத்தும் படகுகளில் வருகின்றனர். இந்தப் புதிய பாலம் இனி பக்தர்களுக்கு பெரிய அளவில் உதவும் என்று கூறப்படுகிறது. இங்கு பொதுக் கூட்டம் ஒன்றிலும் பேசினார் மோடி.

இதுதவிர 4 வழிச் சாலையான போர் பந்தர்-துவாரகா சாலைக்கும் அடிக்கல் நாட்டவிருக்கிறார். பிறகு ரூ.2,500 கோடி மதிப்பிலான ராஜ்கோட் பன்னாட்டு விமான நிலையத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்கிறார். ராஜ்கோட்டிலிருந்து ஒரு மணி நேரதூரத்தில் உள்ள சோடிலாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுகிறார்.

காந்தி நகரில் ஐஐடி புதிய கட்டிடத்தைத் திறந்துவைக்கிறார். அக்டோபர் 8-ம் தேதி தன் சொந்த ஊரான வாத்நகரில் ரூ.500 கோடி பெறுமான சிவில் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி ஒன்றைத் திறந்துவைக்கிறார். மண்ணின் மைந்தரான மோடியை வரவேற்க பல்வேறு அலங்கார மோஸ்தருடன் இந்த ஊர் தயாரா கியுள்ளது.

Leave a Reply