குடகில் தேசிய ராணுவ அகாதெமி தொடங்கப் படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

குடகுமாவட்டம், மடிக்கேரியில் கொடவா மக்களின் ஹாக்கிகோப்பை இறுதிப்போட்டியை இன்று தொடக்கிவைத்து அவர் பேசியது:

இந்தியாவின் முதல் ராணுவதளபதி கே.எம்.கரியப்பா, ஜெனரல் திம்மையா போன்றவர்கள் பிறந்த குடகு மாவட்டத்தில் ராணுவ கல்விநிறுவனங்கள் எதுவும் இல்லை என்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

குடகு மாவட்டத்தில் இருந்து ராணுவத்திற்கு அதிகளவில் பங்காற்றி வருகிறார்கள். எனவே, எதிர் காலத்தில் குடகில் தேசியராணுவ அகாதெமி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல, ஹாக்கி அகாதெமி கிளை, இந்திய விளையாட்டு ஆணையத்தின் கிளைகளும் குடகுமாவட்டத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கே.எம்.கரியப்பா, ஜெனரல் திம்மை யாவுக்கு மரியாதை செலுத்தவே குடகுமாவட்டத்திற்கு வந்தேன். குடகு மாவட்ட மக்கள் ராணுவத்தில் சேருவதையும், ஹாக்கி விளையாடு வதையும் பெருமையாக கருதுவது தேசிய பெருமையாக கருதுகிறேன் என்றார் அவர்.

Leave a Reply