குடியரசு தினத் தன்று நாட்டில் உள்ள மொத்தம் 18 லட்சம் போலீசாருக்கும் தனித் தனியாக வாழ்த்துதெரிவிக்க திட்டமிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அதாவது அவர்கள் அனைவருக்கும் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் வாழ்த்துசெய்தி அனுப்ப உள்ளார். டி.ஜி.பி. முதல் கான்ஸ்டபிள் வரை அனைவருக்கும் அவர் எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்.

இந்த தனது விருப் பத்தை சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் நடந்துமுடிந்த டி.ஜி.பிக்கள் மாநாட்டில் மோடி தெரிவித்தார். குடியரசு தினத்துக்கு முன்பாக அனைத்து போலீசாரின் செல்போன் எண்களை சேகரித்து தருமாறு அனைத்து மாநில டி.ஜி.பிக்களையும் அவர் கேட்டுக்கொண்டார். பிரதமர் ஒருவர் நாடுமுழுவதும் உள்ள எல்லா போலீசாரையும் எஸ்எம்எஸ் மூலமாக நேரடியாக வாழ்த்துவது இதுவே முதன் முறையாகும்.

Leave a Reply