குடியுரிமை சட்டம் தொடர்பாக சென்னை திநகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் பேசுகையில், அசாமில் நடக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு, நீதிமன்ற உத்தரவால் நடக்கிறது. அந்த நடைமுறை பிறமாநிலங்களுக்கு பொருந்தாது. குடியுரிமை திருத்தசட்டம் என்பது குடியுரிமை கொடுக்கும் சட்டம். யாருடைய அந்தஸ்தையும் பறிக்கும்சட்டம் அல்ல. பழைய நடைமுறைகளில் எந்தபிரச்னையும் இல்லை. யாருடைய குடியுரிமை பறிக்கப்படும் எனக் கூறுகிறார்களோ அவர்களிடம் விளக்கம் தர தயாராக இருக்கிறோம். பார்லிமென்டில் விவாதம் நடந்தபோது, எதிர் கட்சியினரின் அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதில் அளிக்கப் பட்டது. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. முறையாக பதிவுசெய்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. குடியுரிமை சட்டத்தை பற்றி பேசுவோர் அகதிகள் முகாமை பற்றி பேசவில்லை. மனித உரிமையை பற்றி பேசாதவர்கள் தான் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசுகிறார்கள் அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்களின் உரிமைகளை பற்றி யாரும்பேசுவது இல்லை. முகாமில் வசிப்போருக்கும் குடியுரிமை வழங்கப்படும். குடியுரிமையை பறிக்க சட்டம் கொண்டுவரவில்லை. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருக்கும் மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தசட்டம், 1995ல் இருந்து நடைமுறையில் இருக்கிறது.

சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது செல்லாது. அவர்கள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது. அவர்கள் சட்ட சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தால் எந்த பாதிப்பும் இல்லை. குடியுரிமை சட்டம் குறித்து உண்மைக்கு புறம்பாக பேசி மக்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்க வேண்டாம், பொறுப்புடன் பேசவேண்டும்.6 ஆண்டுகளில் 2,838 பாகிஸ்தானியர்கள், 914 ஆப்கானிஸ்தானியர்கள், 172 வங்கதேசத்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.1964- 2008 வரை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed.