குடியுரிமை சட்டத்தை ஆதரித்து சத்குரு ஜக்கிவாசுதேவ் விளக்கம் அளித்த வீடியோவை, பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாட்டின் பலபகுதிகளில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஈஷா யோகா மையத்தின் சத்குரு ஜக்கிவாசுதேவ் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பல தரப்பினர் பங்கேற்றனர். அதில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், ‘‘குடியுரிமை சட்டம் தொடர்பாக உ.பி.யில் போராட்டங்கள் நடக்கின்றன. அந்தச்சட்டம் என்ன என்பது குறித்து எனக்கு குழப்பமாக உள்ளது. உங்கள் கருத்து என்ன?’’ என்று ஜக்கி வாசுதேவிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஜக்கி வாசுதேவ் விரிவான விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: ஒரே நாடாக இருந்த இந்தியா, 3 ஆக பிரிந்தது. அதுவும் மற்ற 2 நாடுகள் மத ரீதியாக பிரிந்தன. அதை சட்டமாகவே அங்கு அமல்படுத்தப் பட்டன. அதிர்ஷ்டவசமாக இந்தியா அப்படி மாறவில்லை. இங்கு எல்லா மதத்தினரும் ஒன்றுதான்.இந்தியாவில் சட்டத்தின்முன் அனைவரும் ஒன்றுதான். பிரிவினைக்குப் பின்னர் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்தனர். மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்க இப்போது சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்தச்சட்டம் வந்திருக்க வேண்டும்.

அதேபோல தேசிய குடிமக்கள் பதிவேடு என்பதை எல்லா நாடுகளும் பின்பற்றுகின்றன. இந்தநாட்டில் தங்கியிருப்பவர் யார் என்பதை பதிவுசெய்ய வேண்டும். இங்குள்ள ஒருவரிடம் பிறந்த இடம், மூதாதையர்கள் பற்றிய விவரங்கள் கேட்கின்றனர். ஆதார், பிறப்பு சான்று, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, மற்ற ஆவணங்கள் கேட்கின்றனர். இவற்றில் எதுவும் இல்லை என்றாலும் கூட, உங்களை பல ஆண்டுகளாக தெரிந்த 3 சாட்சிகளை கேட்கிறார். இவற்றில் எதுவும்இல்லை என்றால், நீங்கள் யார்? இந்தநாட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விவரங்களை அளிப்பது கடமை.

இந்தச் சட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசு தோல்வி அடைந்துவிட்டது என்றுதான் கருதுகிறேன். ஆனால், குடியுரிமை சட்டம் என்பது இங்குள்ளவர்களை வெளியேற்றுவது என்று தவறான தகவல்களைப் பரப்பி விட்டனர். அந்த மிகப் பெரிய பொய், வானத்து அளவுக்கு பெரிதாகி இப்போது அடங்கியிருக்கிறது.

இவ்வாறு லக்னோ இளம்பெண்ணுக்கு ஜக்கிவாசுதேவ் விளக்கம் அளிக்கிறார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை பிரதமர் மோடி நேற்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ‘

Comments are closed.