மதுரை: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஆங்காங்கே காண முடிகிறது. இதற்கு மாநகராட்சியின் அலட்சியமே காரணம் என்று மேற்குவங்கத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ரூபாகங்குலி கூறினார்.


மதுரையில் கோ.புதூர் அருகே தூய்மை இந்தியாதிட்டத்தின் பிரச்சாரப்பணியில் ஈடுபட்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

உணவுப் பொருட்களையோ அல்லது வேறு ஏதும் கழிவுப்பொருட்களையோ தெருக்களில் வீசி எறிகின்றபழக்கம் நம்மிடம் உள்ளது.

படித்தவர்களும் கூட இதேதவறைச் செய்கிறார்கள். ஆனால் அதேபோன்று நமது வீடுகளில் நாம்செய்வோமா?
தெருக்களில் இருக்கின்ற குப்பைத்தொட்டிகளில் கழிவுகளைப் போய் போடுகின்ற பழக்கத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தியாவிலுள்ள எந்தத்தெருவும் குப்பைத் தொட்டியல்ல… கழிவு சாக்கடையும் அல்ல என்பதை எல்லோரும் மனதில்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் தூய்மையைக் கருதியே பாஜக இதனை தேசியதிட்டமாக உருவாக்கி, அதனை செயல் படுத்தவும் நடைமுறைப்படுத்தவும் பல்வேறு வகையிலும் முயன்றுவருகிறது.

தேசியத் தலைவர்களின் நல்லநோக்கத்திற்கு நாமும் கைகொடுக்க வேண்டும். இந்த மூன்றாண்டு சாதனைகளை விளக்குவதற்கு டெல்லியிலிருந்து பாஜக சார்பாக தலைவர்களும், பிரதிநிதிகளும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் வருகைதர உள்ளனர்.

இதன்மூலம் பொது மக்களுக்கு தூய்மை குறித்த அக்கறையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும்' என்றார்.

Leave a Reply