குமரிமாவட்டத்தில் பா.ஜ.க.வின் வாக்குவங்கி அதிகரித்துள்ளது. 6 தொகுதிகளிலும் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு பாஜக. வேட்பாளர்கள் கடுமையாக நெருக்கடியை கொடுத்துள்ளதை தேர்தல்முடிவு காட்டுகிறது.

குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், நாகர்கோவில் ஆகிய 4 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் 2–வது இடம் பிடித்து சாதித்துகாட்டி உள்ளனர். கன்னியாகுமரி, பத்மநாபபுரம் ஆகிய தொகுதிகளில் பாஜக. 3–வது இடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம் கடந்த தேர்தல்களைவிட இந்த தேர்தலில் பாஜக.வுக்கான ஆதரவு பெருகியுள்ளதை காட்டுகிறது. இதனால் பா.,ஜனதாவினர் தோல்வியை தழுவினாலும் வெற்றி புன்னகை யுடனேயே தொகுதியில் வலம் வருகிறார்கள்.

Leave a Reply