மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், இ அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் அம்மாநிலத்தின் ரேவாவில் உள்ள ஷ்யாம்ஷா அரசு மருத்துவக் கல்லூரியின் சிறப்புப் பிரிவைக் காணொளிவாயிலாக இன்று திறந்து வைத்தனர்.

மத்திய அரசின் பிரதான்மந்திரி சுரக்ஷா யோஜனா திட்டத்தின்கீழ் ரூபாய் 150 கோடி ரூபாய் செலவில், இந்த 200 படுக்கைகள் கொண்ட சிறப்புப்பிரிவு கட்டப்பட்டுள்ளது.

நரம்பியல்,  நரம்பியல் அறுவைசிகிச்சை, சிறு நீரகவியல், இருதய வியல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இந்த சிறப்புப்பிரிவில் இடம் பெற்றுள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், சுகாதார துறையில் இந்தியா தன்னிறைவை அடைவதற்கு இந்த சிறப்புப்பிரிவு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

முன்னாள் அடல் பிகாரி வாஜ்பாய், 2003 ஆம் ஆண்டு தமது சுதந்திர தின விழா உரையில்,  பிரதான் மந்திரி சுரக்ஷாயோஜனா திட்டத்தின் கீழ் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்படும் என்று அறிவித்ததாக அமைச்சர் கூறினார். பிரதமர் நரேந்திரமோடியின் வழிகாட்டுதலின் பேரில் மத்திய அரசு, குறைந்தவிலையில் தரமான சுகாதாரவசதிகளை அளிக்க உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 6-ல் இருந்து 22 ஆக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர் ஹர்ஷ வர்தன், மேலும் 75 மருத்துவமனைகளை, எய்ம்ஸ் தரத்தில் உயர்த்த திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறினார்.

கொவிட்-19க்கு எதிரான இந்தியா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அமைச்சர், மத்திய அரசின் நோய்தடுப்பு முயற்சிகளினால் கொரோனாவால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை குறைந்து, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகதெரிவித்தார். மொத்த பரிசோதனையின் எண்ணிக்கை 8 கோடியை தாண்டியுள்ளது என்றார் அவர்.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப் பிடிப்பது, கைகளைச்சுத்தமாக வைத்துக் கொள்வது உள்ளிட்ட வழிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Comments are closed.