தற்போது இந்தியாவில் பிராட்பேண்ட் இணைய தளத்தின் வேகம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, டவுண்லோடுசெய்வதி்ல் இது தாமதத்தை ஏற்படுத்துகிறது. நாட்டில் வயர் லெஸ் நெட்வொர்க் அபரிமிதமாக முன்னேறிவரும் நிலையில் பிராட்பேண்ட் இணைய தளத்தையும் தரம் உயர்த்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

சராசரி குறைந்த பட்ச பிராட்பேண்ட் இண்டர்நெட் வேகத்தில் தென்கொரியா 29 MBPS வேகத்துடன் முதலிடத்தில் உள்ளது. நார்வே 21.3 MBPS, சுவீடன் 20.6 MBPS வேகத்துடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

தற்போது இந்தியாவில் குறைந்த பட்சமாக பிராட் பேண்ட் இணையதளத்தின் வேகம் 512 KBPS ஆக உள்ளது. இதை 4 மடங்குவரை அதிகரித்து 2 MBPS ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தகவல் தொடர்பு அமைச்சகம் செய்துவருவதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply