ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்துக்கு மாற்றாக, இந்தியாவில் இன்னொரு ஏவுதளத்தை அமைக்கவேண்டும் என, இந்திய விண்வெளி ஆய்வுநிறுவனம் வெகுநாட்களாக முயற்சித்து வருகிறது. அதற்கு, சரியான இடமாக தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் இருக்கும் என கண்டறியப்பட்டு, அங்கு, ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கவேண்டும் என, மகேந்திரகிரியில் இருக்கும் விஞ்ஞானிகள் பரிந்துரைத்திருந்தனர்.

தென்தமிழகத்தில் இப்படியொரு ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டால் உபதொழில்களும் குலசேகரப்பட்டினத்தைச் சுற்றிலும் வருவதோடு, படித்த இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைகிடைக்கும் என, குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும்திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு தமிழக பாஜக வும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தது.
.
இதையடுத்து, குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை, வரும் 19ல் கன்னியா குமரிக்கு வருகைதரும் பிரதமர் மோடி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியொரு அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், தென்தமிழகத்தின் பொருளாதார மேம்பாடு வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply